சுமார் 42 வயதுடைய ஒருவர் நாடியில் பலன்காண வந்து இருந்தார். என் முன்னே அமர்ந்த அவர், நான் எதுவும் கேட்காமலேயே, தன் ஊர், தன் பெயர், நாடியில் பலன் கேட்கவந்த காரணத்தையும் கூறினார்.

Advertisment

ஐயா, "என் வாழ்வில் நான் அனுபவிக்கும் கஷ்டங்களுக்கு எனது ஜாதகத்தில் உள்ள பித்ரு தோஷம்தான் காரணம் என்று, ஜோதிடர்கள் கூறீனார் கள். நானும் அவர்கள் கூறிய அனைத்து பரிகாரங்களையும், தானம், தர்மங்களை யும் செய்துவிட்டேன். இராமேஸ்வரம், காசி, கயா வரை சென்று பிதுர்தர்ப் பணமும் செய்தேன். ஆனால் என் சிரமங்கள் குறையவில்லை. இப்போதும் என் ஜாதகத்தை பார்க்கும் ஜோதிடர் கள், பிதுர் தோஷம் உள்ளது. அதனால் தான் இந்த கஷ்டங்கள் என்று கூறுகின் றார்கள். எனக்கு உண்டான பித்ரு தோஷமும், அதனால் உண்டாகும் பாதிப்புகளும் விலக அகத்தியர்தான் வழி கூறி அருள் புரியவேண்டும்'' என்றார்.

ss

ஜீவநாடி ஓலையைப் பிரித்துப் படிக்கத் தொடங்கினேன். இவன் பிறப்பு ஜாதகத்திலுள்ள, கிரகநிலை களைக்கொண்டு, வேத ஜோதிடர்கள், பித்ரு தோஷ பாதிப்பு எனக்கூறி, அது தீர்வதற்கு பல பரிகாரங்களையும் கூறியுள்ளார்கள். இவன் பிறந்தபோது எழுதிய ஜாதக கிரக அமைப்பை, இவன் இறப்புவரை, மாற்றி கிரகங்களை கட்டத்தில் குறிக்க முடியாது. அதனால்தான் ஜாதக பலன் பார்க்கும் ஜோதிடர்கள், பித்ரு தோஷம் உள்ளது என்று கூறுகின்றார்கள். இந்த ஜோதிடர்களால் கிரகங்களையும் மாற்றி எழுத முடியாது. இவன் பிறகு தோஷம் நீங்க வழியும் கூறுமுடியாது.

Advertisment

பித்ரு தோஷம், இவனுக்குப் புதிதாக வந்தது இல்லை. இவன் வம்சத்தில் நான்கு தலைமுறையாக தொடர்ந்து வந்து கொண்டு இருக்கின்றது. இவன் தந்தையின் பாட்டன் காலத்திலேயே அவனால் உருவாக்கப்பட்டது. இந்த தோஷம் இவன் வம்சத்தில் செயல்பட்டுவரும் முறையைக் கூறுகின்றேன். தெளிவாகப் புரிந்துகொள்ளச் சொல்.

இவன் தந்தையின் பாட்டன், தன்னைப் பெற்ற தந்தையின் முதுமையான வயதில், அவன் சம்பாதித்து வைத்த சொத்துகளை அபகரித்துக்கொண்டு, தந்தையையும், உடன்பிறந்த சகோதரர்களையும், வீட்டை விட்டு வெளியேற்றி, பசியும், பட்டினியுமாய் அவர்களைக் கஷ்டப்படவைத்தான். தான் சம்பாதித்த சொத்துகளையும், வாழ்விடத்தையும் இழந்த தகப்பன், மனம் வெறுத்து, மகனுக்கு விட்ட பித்ரு சாபம், வம்சத்தில் வளர்ந்து பித்ரு தோஷ மானது.

பெற்ற தந்தையை வீட்டைவிட்டு வெளியேற்றிய பாட்டனுக்கு இரண்டு ஆண் குழந்தைகள். தந்தை உயிருடன் இருக்கும்போதே ஒரு ஆண் குழந்தை வாலிப வயதில் திருமணமாகாமல் இறந்து போனான். இவன் தந்தைக்கு தகப்பனின் பாசம் கிடைக்காமல், மூன்றாம் மனிதர் ஆதரவில் தனது தாய்மாமன் வீட்டில் வளர்ந்தான். இவன் திருமணத்திற்குமுன்பே இவன் தந்தை இறந்துபோனான்.

Advertisment

இந்த பித்ரு தோஷ பாதிப்பு, இவன் வம்சத்தில் பெற்ற தந்தை இருக்கும்போது மகன் இறந்துபோவதும், காப்பாற்றவேண்டிய தந்தை இறந்து போய் தந்தை பாசம் இல்லாமல் மகன் வளர்வதும், தந்தை சம்பாதித்ததை மகன் சாப்பிடமுடியாமலும், மகன் சம்பாதிக்கும் காலத்தில் தந்தை இல்லாமல் போவதும் வம்சத்தில் தொடர்கதையாக நிகழ்ந்துவருகின்றது.

இந்த தோஷ பாதிப்பால், முன்னோர் கள் தேடிய சொத்துகளை அனுபவிக்க முடியாமல் போனது. தந்தைவழி உறவு களால் எந்த நன்மைகளையும் அடைய முடியவில்லை. தந்தைவழி உறவுகளால் ஒதுக்கப்படுகின்றான். ஏன்? சொந்த சாதி இனத்து மக்களாலும் நன்மை கிடையாது. செய்யும் காரியம் செயல்களில் தடை, தாமதம்தான்.

இவன் உழைப்பிற்க்கேற்ற ஊதியம் கிடைப்பது இல்லை. கிடைக்கும் பணத்தில் சிறிதளவுகூட சேமித்து வைக்கமுடியவில்லை. எப்போதும் பணம் பற்றாக்குறைதான். கட்டிய மனைவியிடமும், பெற்ற மகன்களிடமும் எப்போதும், எதிலும் கருத்து வேறுபாடு, வாக்குவாதம்தான். குடும்பத்திலும் அமைதியில்லை. நிம்மதி இல்லாத வாழ்க்கை. இதுபோன்று இன்னும் பல சிரமங்கள். இந்த கஷ்டங்கள் தீர்வதற்கு கோவில்களுக்குச் சென்று கடவுளை வணங்கினாலும் கஷ்டம் தீரவில்லை. பிரார்த்தனைகள் நிறைவேறுவது இல்லை. பித்ரு தோஷம் நீங்க வேத ஜோதிடர்கள் கூறும் பரிகாரங்களைச் செய்தும் அதனால் எந்த பலனும் இல்லை.

முற்பிறவியில், வம்ச முன்னோர்கள் காலத்தில் உண்டான தோஷங்களை எதைச் செய்தும் தீர்த்துக்கொள்ளமுடியாது; தீராது. ஆனால் அவரவரே தனக்கு உண்டான பாவ- சாப- தோஷ பாதிப்பு களை தடுத்துக்கொள்ள முடியும். இவனுக் குண்டான பித்ரு தோஷம், இவனைப் பாதிக்காமல், இவனே தடுத்துக் கொள்ள, நான் கூறும் வழிமுறைகளை, நடைமுறை வாழ்வின் செயல்களில் கடைபிடித்து வாழ்ந்து வரச்சொல். நான் கூறும் பிரார்த்தனைகளை நான் கூறுவதுபோல் முறையாகச் செய்யச் சொல், பித்ரு தோஷப் பாதிப்பில் இருந்து இவன் காப்பாற்றப்படுவான் என்று கூறிவிட்டு, நடைமுறை வாழ்வில் எப்படி வாழவேண்டும் என்ற வழிமுறைகளையும், சில பிரார்த்தனைகளையும் கூறிவிட்டு அகத்தியர் ஓலையில் இருந்து மறைந்தார்.

அகத்தியர் கூறிய வாழ்வியல் வழி முறையை கடைபிடித்து வாழ்ந்து, இனி வருங்கால வாழ்க்கையில் பித்ரு தோஷப் பாதிப்புகளை தடுத்து, உங்களை நீங்களே காப்பாற்றிக்கொண்டு நல்ல வாழ்க்கையை அமைத்துக்கொள்ளுங்கள் என்று கூறி அனுப்பிவைத்தேன்.

செல்: 99441 13267